ॐ श्री गुरुभ्यो नमः ॐ श्री शिवानन्दाय नमः ॐ श्री चिदानन्दाय नमः ॐ श्री दुर्गायै नमः
Source of all Images in this Blog-post : Google Images : ‘Google Image Search’ will reveal the multiple sources of every single image shared in this Blog. For more details, kindly see ‘Disclaimer
பாழடைந்த ஆலயங்களில் வழிபட்டால் பலன் கிடைக்குமா?
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம்’ என்பது ஆன்றோர் வாக்கு. மக்கள் குடியிருக்கும் ஊர்களிலெல்லாம் ஆலயங்களும், ஆலயங்களிலெல்லாம் நித்திய பூஜைகளும் நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான், நாடெங்கிலும் மகரிஷிகளும் முனிவர்களும் மன்னர்களும் பல கோயில்களை எழுப்பிச் சென்றிருக்கிறார்கள்.
English Translation : Great ones have said that one should not live in a place without a temple. Maharishis, sages and kings have erected many temples in every nook and corner of the country so that there are temples in all inhabited villages, towns & cities, and sacred Pujas are performed in all temples.
सभी महापुरुष इस बात से सहमत हैं कि किसी को बिना मंदिर के कस्बे में नहीं रहना चाहिए। महर्षियों, ऋषियों और राजाओं ने पूरे देश में कई मंदिर बनवाए हैं ताकि सभी बसे हुए शहरों में मंदिर बने और सभी मंदिरों में शाश्वत पूजा हो।
கோயில்களில் நித்திய பூஜைகள் தவறாமல் நடைபெற்று வந்தால்தான், ஊரும் நாடும்செழித்துச் சிறக்கும்.
Only if daily Pujas are performed in temples, the town and the country will prosper and flourish.
मंदिरों में अखंड पूजा अर्चना होगी तभी शहर और देश समृद्ध होगा।
ஆனால், அந்நியர்கள் படையெடுப்பின் காரணமாகவும், இயற்கைச் சீற்றங்களின் காரணமாகவும் பல ஆலயங்கள் இன்று சிதிலமடைந்திருப்பதைப் பல ஊர்களில் நம்மால் காணமுடிகிறது.
But today we see many ancient temples in utter ruined condition due to natural disasters & centuries of foreign invasions in many parts of our country.
लेकिन आज हम देख सकते हैं कि कई शहरों में विदेशी आक्रमण और प्राकृतिक आपदाओं के कारण कई मंदिर बर्बाद हो गए हैं।
இப்படிப் பாழடைந்த ஆலயங்கள் சென்று வழிபடலாமா, அது பற்றி சாஸ்திரங்களில் ஏதேனும் சொல்லப்பட்டிருக்கிறதா என்பது பற்றி ஆன்மிகப் பெரியோர்களிடம் விளக்கம் கேட்டோம்.
We asked many enlightened spiritual leaders of our country for an explanation as to whether such ruined temples can be visited and worshiped, and whether there is anything said about all this in our Shastras (Hindu Scriptures).
हमने आध्यात्मिक बुजुर्गों से स्पष्टीकरण मांगा कि क्या ऐसे खंडित मंदिरों में जाकर पूजा की जा सकती है और क्या शास्त्रों में इसके बारे में कुछ कहा गया है।
ஜோதிட வல்லுநர் கிருஷ்ணதுளசி :
பாழடைந்த வழிபாடே இல்லாத கோயில்களுக்குச் சென்று வழிபட்டால், அதனால் எந்தப் பலனும் ஏற்படாது என்பதே உண்மை.
Astrologer Vallanur Krishnatulasi :
The truth is that visiting dilapidated temples that are totally neglected without daily Pujas since centuries and worshiping in those temples will bring absolutely no benefit.
ज्योतिषी वल्लानूर कृष्णतुलसी :
सच्चाई यह है कि अगर आप जीर्ण-शीर्ण मंदिरों में जाकर पूजा करेंगे तो आपको कोई फायदा नहीं होगा।
அதனால்தான் 12 ஆண்டுக்கு ஒருமுறை எல்லாக் கோயில்களிலும் புனருத்தாரணம் செய்து, தெய்வ வடிவங்களுக்குச் சக்தியூட்டி வழிபாட்டை மேற்கொள்கிறோம்.
That’s why once in every 12 years we perform Punarudharanam (Restoration) in all the temples, impart power once again to the images of Deities in the temple, and continue the daily worships once again.
इसलिए हर 12 साल में एक बार हम सभी मंदिरों का पुनरुद्धार (पुनर्स्थापना) करते हैं, मंदिर में देवी-देवताओं की मूर्तियों को एक बार फिर से शक्ति प्रदान करते हैं, और एक बार फिर से प्राचीन दैनिक पूजा जारी रखते हैं।
12 ஆண்டுகள் என்பது குரு பகவானின் ஒரு சுற்று. ஆலயங்களில் உள்ள யந்திரங்களுக்கு வலுவூட்ட மந்திர சக்தி வேண்டும். அதனால்தான் தினமும் அர்ச்சனை செய்து வழிபடப்படும் கோயில்கள் பிரார்த்தனைத் தலங்களாக உள்ளன.
12 years is one cycle of Guru Bhagavan (Planet Jupiter). Yantras in temples need spiritual power through sacred Mantras to strengthen them. That is why temples where we have daily Puja Archanas Abhishekam etc are sanctified places for prayers and worship.
12 वर्ष गुरु भगवान (बृहस्पति ग्रह) का एक चक्र है। मंदिरों में यंत्रों को मजबूत करने के लिए पवित्र मंत्रों के माध्यम से आध्यात्मिक शक्ति की आवश्यकता होती है। इसीलिए जिन मंदिरों में हम प्रतिदिन पूजा अर्चना अभिषेक आदि करते हैं, वे प्रार्थना और पूजा के लिए पवित्र स्थान हैं।
முறையான பூஜைகள், மந்திர உபாசனைகள் இல்லாத ஆலயங்களில் தெய்வ சக்தி இருப்பதில்லை. அதனால், அங்கு தனி நபர் வழிபடுவதிலும் பலனில்லை.
There is no divine power in temples where they do not have sacred daily Pujas and Mantra Upasanas. Therefore, if an individual goes and worships in these neglected dilapidated temples, it’s of absolutely no use.
मंदिरों में उचित पूजा और मंत्र उपासना के बिना दैवी शक्ति का अस्तित्व नहीं है। इसलिए वहां व्यक्तिगत पूजा भी व्यर्थ है।
ஆனால், ஓர் ஊரில் இருக்கும் ஆலயத்தை மீட்டெடுக்க வேண்டும், அது மீண்டும் பிரசித்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் கூடி, அவர்களால் முடிந்த தூய்மைப் பணிகளை மேற்கொண்டு எளிய பூஜைகளைச் செய்து வந்தால், நாளடைவில் அந்த ஆலயம் மேம்பாடு அடையும். காரணம், எண்ணங்களுக்கு நல்ல வலிமையுண்டு.
But if a small group of people gather together with the noble intention of restoring the temple in a village, town or city, in order to make it a well-known temple once again and start performing simple Pujas and keep the temple clean and tidy as much as they can, eventually the temple will improve and grow in its spiritual power. Because thoughts in our mind have great power.
लेकिन अगर कुछ लोग किसी कस्बे में मंदिर के पुनरुद्धार के इरादे से इकट्ठा होते हैं और इसे फिर से प्रसिद्ध करते हैं, और साधारण पूजा करते हैं और जितना हो सके इसे साफ करते हैं, तो अंततः मंदिर अपनी आध्यात्मिक शक्ति में सुधार और विकास करेगा। क्योंकि विचारों में बड़ी शक्ति होती है।
மந்திரங்களைப்போலவே நல்ல எண்ணங்கள் தெய்வ சக்தியைத் தூண்டிவிடும் ஆற்றல் கொண்டவை. நூறு பேர் கூடி அந்த ஆலயம் புனரமைக்கப்பட வேண்டும் என்று வேண்டினால், அந்த எண்ணமே செயலாகிவிடும் அற்புதம் நிகழ்கிறது.
Like the sacred Mantras, positive thoughts too have the power to invoke divine energy. If a hundred people gather together and ask for the ancient, dilapidated temple to be rebuilt, restored, renovated, a miracle happens, and the idea becomes a reality.
मंत्रों की तरह, सकारात्मक विचारों में दिव्य ऊर्जा का आह्वान करने की शक्ति होती है। अगर सौ लोग इकट्ठा होकर मंदिर के पुनर्निर्माण की मांग करते हैं, तो एक चमत्कार होता है जहां विचार वास्तविकता बन जाता है।
பலர் கூடி ஒரே நோக்கத்தில் வேண்டும்போது அந்தக் கூட்டுப் பிரார்த்தனை பலிதமாகிறது.
That collective prayer of many people becomes very powerful when many people come together with a common goal.
वह सामूहिक प्रार्थना तब शक्तिशाली हो जाती है जब बहुत से लोग एक समान लक्ष्य के साथ एक साथ आते हैं।
அப்போது தானாக அந்த ஆலயம் மீண்டெழுகிறது. எனவே, உங்கள் ஊரில் சிதைந்துபோன ஆலயங்கள் இருந்தால் கவலைப்படாமல் செல்லுங்கள்.
Then automatically the temple recovers, regains its lost power and past glory once again. So, don’t worry if there are dilapidated, neglected ancient temples in your village or town. Just visit the temple and start offering your Pujas.
तब स्वतः मंदिर ठीक हो जाता है। इसलिए, अगर आपके शहर में जीर्ण-शीर्ण मंदिर हैं तो चिंता न करें।
வழிபடுங்கள். ஆனால், உங்கள் காரியத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், அந்தக் கோயில் மீண்டும் புதுப் பொலிவு பெறவேண்டுமென்று பலரோடு சென்று பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.
पूजा कीजिये लेकिन अपने स्वार्थ के लिए प्रार्थना मत कीजिये, जाइये और प्रार्थना कीजिये कि मंदिर को उसकी नई चमक वापस मिल जाए।
நாளடைவில் அந்தக் கோயிலும் சிறக்கும்; உங்கள் ஊரும் சிறக்கும்.”
आखिरकार वह मंदिर फलेगा-फूलेगा; आपका शहर भी शानदार होगा ।
சிதம்பரம் நடராஜர் கோயில் அர்ச்சகர் நடராஜ ரத்னா :
“கோயில் என்றாலே அது காலம் காலமாக வழிபாடு செய்யும் இடமாக, தெய்வ சாந்நித்யத்துடன் திகழ வேண்டும் என்பதற்காகத்தான், நம் முன்னோர்கள் ஆகம சாஸ்திரங்களின்படி கோயில்களை அதிக சிரத்தை எடுத்துக்கொண்டு நிர்மாணித்தார்கள்.
चिदंबरम नटराज मंदिर के पुजारी नटराज रत्न
एक मंदिर सदियों के लिए पूजा अर्चना प्रार्थना की जगह है, भगवान के सानिध्य से परिपूर्ण करने के लिए, हमारे पूर्वजों ने आगम शास्त्रों के अनुसार बड़ी पीड़ा के साथ मंदिरों का निर्माण किया था।
ஆனாலும், கால மாற்றம் மற்றும் படையெடுப்புகளின் காரணமாகவும் பல ஆலயங்கள் சிதிலமடைந்துவிட்டன.
हालांकि, समय के परिवर्तन और विदेशी आक्रमणों के कारण, हमारे देश के कई मंदिर जर्जर हो गए हैं।
அத்தகைய ஆலயங்கள் பலவற்றை மகான்கள் புனரமைத்ததும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
आप यह भी जानते होंगे कि ऐसे कई मंदिरों का पुनर्निर्माण हमारे संतों ने करवाया था।
ஆலயங்களைப் புனரமைப்பது புண்ணியச் செயல். எத்தனை ஆண்டுகளானாலும் ஒரு கோயிலில் தெய்வ சாந்நித்யம் இருக்கவே செய்யும்.
मंदिरों का पुनर्निर्माण एक पवित्र कार्य है। मंदिर चाहे कितने भी साल का हो जाए, वहां भगवान का साक्षात दर्शन और सानिध्य तो होता ही है।
பூஜைகள் இல்லாததால் அந்த சாந்நித்யத்தை நம்மால் உணர முடியாது. மக்கள் பலரும் ஒன்று கூடி, சிதிலமுற்ற கோயில்களில் வழிபாடு செய்து வேண்டிக்கொண்டால், நிச்சயமாக அந்த ஆலயம் மீண்டெழும்.
पूजा के बिना हम उस पवित्रता को महसूस नहीं कर सकते। यदि बहुत से लोग एक साथ एकत्रित हों और नष्ट हुए मंदिरों में पूजा और प्रार्थना करें, तो निश्चित रूप से मंदिर का जीर्णोद्धार होगा।
அப்படி வேண்டிக்கொண்ட மக்களின் குலமும் தலைமுறை தலைமுறையாகச் சிறப்புற்று வாழும்.
इस प्रकार प्रार्थना करने वाले लोगों का कुल पीढ़ी-दर-पीढ़ी सम्मान और कीर्ति में बना रहेगा।
ஆகம விதி, தோஷம் என்றெல்லாம் குழப்பிக்கொள்ளாமல் உங்கள் ஊர் ஆலயங்களைச் சுத்தப்படுத்துங்கள்.
अपने शहर के मंदिरों को आगम विधि और दोष इत्यादि से भ्रमित किए बिना साफ करें।
நல்லது செய்ய ஏன் தயங்க வேண்டும்? தயங்காமல் சிதிலமடைந்த கோயில்களில் வழிபடுங்கள். நல்லதே நடக்கும்.’’
भला करने में हम क्यों हिचकिचाएं ? खंडित मंदिरों में बेझिझक पूजा करें। सब ठीक हो जाएगा। भला ही होगा।
ஸ்தபதி தசரதன் :
பாழடைந்த ஆலயங்கள் அனைத்தையும் வழிபட முடியாது. தெய்வ மூர்த்தங்களே இல்லாத கோயில்களில் எப்படி வழிபட முடியும்?
सभी जीर्ण-शीर्ण मंदिरों में पूजा नहीं की जा सकती। जिन प्राचीन मंदिरों में मूर्तियाँ नहीं हैं, वहाँ आप पूजा कैसे कर सकते हैं?
அதேபோல், பின்னமடைந்த தெய்வ மூர்த்தங்களையும் நாம் வழிபடக் கூடாது. அப்படிப்பட்ட ஆலயங்களில் ஓரளவுக்கேனும் திருப்பணிகள் மேற்கொண்டு, அதன் பிறகே வழிபட வேண்டும்.
इसी तरह, हमें पतित मूर्तियों की भी पूजा नहीं करनी चाहिए। ऐसे मंदिरों में कम से कम कुछ संस्कार करने के बाद ही उन मूर्तियों की पूजा करनी चाहिए।
சிதிலமான ஓர் ஆலயத்தில் வழிபடலாமா என்பதை அறிந்துகொள்வதற்கு எளிய வழி உண்டு.
यह जानने का एक सरल तरीका है कि क्या आप एक खंडित मंदिर में पूजा कर सकते हैं।
சிதைந்திருக்கும் கோயிலில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்து பாருங்கள். உங்கள் மனம் தியானத்தில் லயித்தால், மனதில் அமைதி ஏற்பட்டால், நல்லதொரு சூழல் அங்கே காணப்பட்டால் அந்த இடத்தில் தெய்வ அனுக்கிரகம் பரிபூரணமாக உண்டென்பதை உறுதியாகச் சொல்லலாம்.
खंडित मंदिर में कुछ देर बैठकर ध्यान करें। यदि आपका मन ध्यान में लीन है, यदि आपके मन में शांति है, यदि आपको वहां अच्छा वातावरण मिलता है, तो आप सुनिश्चित हो सकते हैं कि उस स्थान पर ईश्वरीय कृपा परिपूर्ण है।
சில கோயில்களில் தெய்வ மூர்த்தங்கள் இல்லையென்றாலும்கூட, புனித அதிர்வுகளை நம்மால் உணர முடியும்.
भले ही कुछ मंदिरों में मूर्तियाँ नहीं हैं, फिर भी हम पवित्र स्पंदनों को उन मंदिरों में महसूस कर सकते हैं।
அந்த இடங்களில் சித்தர்கள், மகான்களின் சாந்நித்யம் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.
आप जान सकते हैं कि उन स्थानों पर सिद्धों और महान विभूतियों की उपस्थिति है।
You can know that there is presence of Siddhas and Mahans in those places.
அந்த இடங்களில் தெய்வத் திருவுருவப் படங்களை வைத்து வழிபடலாம். தனிப்பட்ட காரியத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், கோயிலில் எழுந்தருளியிருந்த ஆண்டவன் மறுபடியும் வெளிப்பட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.
उन जगहों पर आप देवी-देवताओं की छवियों को रखकर पूजा कर सकते हैं। एक व्यक्तिगत मामले के लिए प्रार्थना न करें, बल्कि एक उच्च इरादे से प्रार्थना करें कि मंदिर फिर पुनर्जीवित हो भगवान फिर से प्रकट हों।
In those places, you can worship with images of deities. Do not pray for a personal matter, but pray with a high intention that the risen Lord in the temple should appear again.
உங்களின் நல்ல எண்ணம் அந்தக் கோயிலை மறுபடியும் எழும்பச் செய்துவிடும்.”
आपके नेक इरादे से मंदिर फिर से पुनर्जीवित हो उठेगा।”
Your good intentions will make the temple rise again.
உண்மைதான்! ஊர் கூடித்தானே தேரை இழுக்கிறோம். உங்கள் ஊரிலுள்ள பழைமையான, சிதிலமான ஆலயங்களில் சென்று வழிபடுங்கள்.
यह बिलकुल सच है! जैसे ही गांव इकट्ठा होता है, हम मंदिर के रथ को खींचते हैं। अपने शहर के पुराने, जीर्ण-शीर्ण मंदिरों में जाएँ और सब मिलकर सामुहिक पूजा करें।
It’s true! As soon as the village gathers, we pull the chariot. Visit the old, dilapidated temples in your town and worship.
பிரபலமான கோயிலில் தங்கத் தேர் இழுப்பதைவிட, கவனிக்கப்படாத கோயிலில் தீபமேற்றி வழிபடுவதன் மூலம் அந்தக் கோயில் மீண்டும் புதுப் பொலிவு பெறுவதுடன், உங்கள் வாழ்க்கையும் உங்கள் சந்ததியினரின் வாழ்க்கையும் செழித்துச் சிறக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
एक प्रसिद्ध मंदिर में एक स्वर्ण रथ को खींचने के बजाय, एक पवित्र दीपक जलाकर एक उपेक्षित मंदिर में पूजा करने से निश्चित रूप से मंदिर की प्राचीन चमक वापस आ जाएगी और आपका जीवन और आपके वंशजों का जीवन फलता-फूलता रहेगा। इसमें तनिक भी संदेह नहीं है।
Rather than pulling a golden chariot at a famous temple, lighting a lamp and worshiping at an overlooked temple will bring the temple back to its luster and no doubt, your life and the lives of your descendants will flourish.